சினிமா

பிரபல நடிகைகளுடன் ஹுரோயினாக நடிக்கவுள்ள பிக்பாஸ் சாக்‌ஷி! எந்த படத்தில் தெரியுமா?

Summary:

Shaskshi

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் மனதில் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. இவர் இதற்கு முன்பு மாடலிங்காக பணியாற்றியுள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்திலும், தல அஜித் நடிப்பில் வெளியாகி விஸ்வாசம் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள அரண்மனை3 படத்தில் ஒரு ஹுரோயினாக நடிக்கவுள்ளார். மேலும் அப்படத்தில் ராசி கண்ணா, ஆண்ட்ரியா ஆகிய பிரபல நடிகைகளுடன் இவரும் ஒரு ஹுரோயினாக நடிக்கவுள்ளார். 


Advertisement