"நயன்தாராவிடம் அந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்" விக்னேஷ் சிவனிற்கு அறிவுரை கூறிய ஷாருக்கான்.?
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள்.

'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பாலிவுட்டில் முதன் முதலில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் 'ஜவான்' இதனால் இந்த திரைப்படத்தின் மீது நயன்தாராவின் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இதுபோன்ற நிலையில், நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனிற்கு ஷாருக்கான் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதன்படி ஜவான் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை பாராட்டி விக்னேஷ் சிவன் இணையத்தில் பதிவு வெளியிட்டார்.

இந்த பதிவில் ஷாருக்கான் "உங்கள் அன்பிற்கு நன்றி, நயன்தாரா சிறப்பானவர் இது உங்களுக்கே தெரியும். ஆனால் நயன்தாராவிடம் ஜாக்கிரதையாக இருங்கள். நயன்தாரா அடி மற்றும் சில உதைகளை கற்றுக் கொண்டு உள்ளார் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு விக்னேஷ் சிவன் பதில் அளித்திருக்கிறார். இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.