சினிமா

ஆர்யாவின் திருமண ரகசியத்தை போட்டு உடைத்த மாமியார்! என்ன சொன்னார் தெரியுமா?

Summary:

Shaiesha mother talkes about arya shaiesha wedding

கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் வனமகன் கதாநாயகி சாயிஷா. இந்நிலையில் நடிகர் ஆர்யாவும்,  நடிகை சாயிஷாவும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. 

ஆனால், இதுகுறித்து ஆர்யா தரப்போ அல்லது சாயிஷா தரப்போ எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களையும் தரவில்லை. இது வெறும் வதந்தியாக இருக்கலாம் என கூறப்பட்டுவந்தது.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் சாயிஷாவுடனான திருமணத்தை உறுதி செய்தார் நடிகர் ஆர்யா. அவர் பதிவிட்டுல ட்விட்டில் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆர்யா - சாயிஷா திருமணம் குறித்து பேசிய சாயிஷாவின் தாயார், ஆர்யாவும், சாயிஷாவும் காதலிப்பதாகவும், ஆனால் இது காதல் திருமணம் இல்லை, சாயிஷாவை ஆர்யா வீட்டிற்கு பிடித்திருந்தது, எங்களிடம் அதற்காக அணுகினார்கள், எங்களுக்கும் ஆர்யாவை பிடித்திருந்தது உடனே சம்மதித்துவிட்டோம் என கூறியுள்ளார் ஆர்யாவின் வருங்கால மாமியார்.


Advertisement