அடேங்கப்பா.. தயாரிப்பாளரை மணந்த சீரியல் நடிகை மஹாலட்சுமிக்கு ஒரு மாத சம்பளமே இவ்வளவா?? ஷாக்கான ரசிகர்கள்!!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது கேரியரை தொடங்கியவர் நடிகை மஹாலட்சுமி. பின் அவர் ராதிகா நடிப்பில் வெளிவந்த அரசி என்ற தொடரில் நடித்ததன் மூலம் சீரியல்களில் களமிறங்கினார். பின் அவர் பல பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் ஹீரோயின், வில்லி என பல ரோல்களிலும் நடித்துள்ளார்.
அவர் திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கணவரை விவாகரத்து செய்து இருந்தார். தொடர்ந்து பிஸியாக படம் சீரியல் என இருந்த நடிகை மஹாலட்சுமி அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திடீர் திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மஹாலட்சுமி ரவீந்தரை பணத்திற்காக திருமணம் செய்தார் எனவும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் நடிகை மஹாலட்சுமி ஒரு மாதத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக சினிமா, தொடர்களில் நடித்து வரும் அவர் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 3 லட்சம் சம்பளமாக பெறுகிறார் என தகவல்கள் பரவி வருகிறது.