புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நடுரோட்டில் காதலனுடன் விஜய் டிவி சீரியல் நடிகை!! என்னமா இப்படி பண்றீங்க!! வைரல் புகைப்படம்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நெஞ்சிருக்கும் வரை என்ற தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சீரியலில் அறிமுகமானவர் நடிகை சரண்யா. அதைத் தொடர்ந்து அவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற தொடரில் நடித்தார்.
பின்னர் அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து என்ற தொடரில் நடித்திருந்தார். மேலும் தற்போது புதிதாய் ஒளிபரப்பாகி வரும் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார். இந்த நிலையில் தற்போது நடிகை சரண்யா நடுரோட்டில் தனது காதலனைக் கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை பெற்று வருகிறது.