10 வருஷமாச்சு.. நம்பவே முடியலை.! செம ஹேப்பியில் நடிகை சினேகா.! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா??
ஹீரோவாக அறிமுகமாகும் ராஜா ராணி சீரியல் நடிகர்.. அசத்தல் அப்டேட்.!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சித்து. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 என்ற சீரியலிலும் நடித்திருந்தார். இதனிடையே தன்னுடன் நடித்த சீரியல் நடிகை ஸ்ரேயா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சித்து தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அதன்படி அறிமுக இயக்குனர் டி எஸ் ராஜ்குமார் இயக்கும் அகோரி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சித்துவுக்கு ஜோடியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை மோஷன் ஃபிலிம் பிக்சர் சுரேஷ் மேனன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.