சினிமா

ப்பா... என்ன ஓட்டு ஓட்றாரு....காற்றின் மொழி சீரியல் நடிகர் சஞ்சீவ்வின் திரில் வீடியோ காட்சி!

Summary:

சீரியல் நடிகர் சஞ்சீவ் ட்ராக்டர் டிரைவ் பண்ண வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகர் சஞ்சீவ் ட்ராக்டர் டிரைவ் பண்ண வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. இதில் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சஞ்சீவ். அவர் அந்த தொடரில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு ஐலா என்ற அழகிய மகளும் உள்ளார். இந்த நிலையில் ஆலியா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடரிலும், மேலும் சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

சீரியலில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் அவரது குடும்ப வாழ்க்கையையும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். அந்த வகையில் விடுமுறை நாளான இன்று அவரது குடும்பத்துடன் Wildplanetresort சென்று ஒரு ட்ராக்டர் ஒன்றை பயங்கர சந்தோசமாக டிரைவ் பண்ண வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களிடயே லைக்ஸை பெற்று வருகிறார்.


Advertisement