பர்ஹானா திரைப்படத்தைப் பற்றி செல்வராகவனின் வைரலாகும் பதிவு.. மதவெறுப்பை தூண்டுகிறதா பர்ஹானா திரைப்படம்.?

பர்ஹானா திரைப்படத்தைப் பற்றி செல்வராகவனின் வைரலாகும் பதிவு.. மதவெறுப்பை தூண்டுகிறதா பர்ஹானா திரைப்படம்.?


selvaragavan-posted-about-farhana-movie-in-twitter-JMSBJ6

கோலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனரான செல்வராகவன் பல படங்களை இயக்கி பிரபல இயக்குனராக இருக்கிறார். தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் செல்வராகவன் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பகாசூரன், சாணி காயிதம் போன்ற திரைப்படங்கள் பெரிதளவில் பேசப்பட்டு வந்தது.

Selvaraghavan
இது போன்ற நிலையில் செல்வராகவன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான 'ஃபர்கானா' திரைப்படம் பற்றிய பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்படி 'பர்ஹானா' திரைப்படம் வெளியானதையடுத்து மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது. இப்படம் வெளியாவதற்கு முன்பு மதவெறுப்பை தூண்டுகிறது என்று பல சர்ச்சைகளில் சிக்கி இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Selvaraghavan
இதையடுத்து, 'பர்ஹானா' திரைப்படம் வெளியான பின்பு இத்தனை திரையரங்கில் பார்த்த இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் "என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் ஃபர்கானா திரைப்படமும் ஒன்று. ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளார்.