செக்க சிவந்த வானம் படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது.. ரசிகர்கள் மகிழ்ச்சி...!



sekka-sivantha-vanam-news

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி கொண்டு இருக்கும் படம் தான் செக்க சிவந்த வானம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நான்கு நடிகர்கள் நடிக்கிறார்கள். சிம்பு, அருண் விஜய், அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர் பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இருந்து ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் மூன்றாவது பாடல் வெளியாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலின் வரிகள் செவந்து போச்சு நெஞ்சி என ஆரம்பிக்கும் என தகவல் வந்துள்ளது. இந்த மூன்றாவது பாடலின் இரண்டு வரிகளை இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது...