அதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்! தந்தையின் தற்போதைய நிலை குறித்து நல்ல செய்தியை வெளியிட்ட எஸ்.பி.பி.சரண்!

அதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்! தந்தையின் தற்போதைய நிலை குறித்து நல்ல செய்தியை வெளியிட்ட எஸ்.பி.பி.சரண்!


sbp-interested-that-go-to-home

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த மாதம் 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

அதனை தொடந்து அவரது உடல்நிலை மோசமான நிலையில் செயற்கை சுவாச கருவிகள் மற்றும் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.  

SPB

இந்நிலையில் எஸ்.பி.பியின் உடல்நலம் சீராகிவிட்டது. அவர் சிறிது பேச தொடங்கியுள்ளார். முழுவதும் சுயநினைவு திரும்பிவிட்டது. அவருக்கு பிஸியோதெரபி சிகிச்சை நடைபெறுகிறது. மேலும் மருத்துவர்களின் உதவியுடன் 15-20 நிமிடங்கள் உட்கார்ந்து இருந்தார். உணவு எடுத்துக் கொள்கிறார் என சமீபத்தில் அவரது மகன் எஸ்.பி.சரண் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவின் உடல் நிலை நல்ல முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது. திரவ உணவு எடுத்துக் கொள்கிறார். விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப மிகவும் ஆர்வமாக உள்ளார் என கூறியுள்ளார்.