சினிமா

ஆத்தாடி.. கணவர் ஆர்யாவிற்கே டஃப் கொடுப்பார் போல!! சாயிஷாவின் வீடியோவை கண்டு மிரண்டுபோன ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற வனமகன

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற வனமகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அதனைத் தொடர்ந்து அவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் என தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். 

இந்நிலையில் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது நடிகை சாயிஷா மற்றும் அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்யா இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அண்மையில் வெளிவந்த டெடி என்ற படத்தில் கூட இணைந்து நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 இந்த நிலையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் சாயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்த நிலையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் தற்போது ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கணவர் ஆர்யாவையே மிஞ்சிவிடுவீர்கள் போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement