சினிமா

என் அன்பு நண்பன் விஜி... கேப்டனுக்காக நடிகர் சத்யராஜ் வெளியிட்ட உருக்கமான வீடியோ!!

Summary:

என் அன்பு நண்பன்... கேப்டனுக்காக நடிகர் சத்யராஜ் வெளியிட்ட உருக்கமான வீடியோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தேமுதிகவின் தலைவருமாக விளங்கிய நடிகர் விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பால் அவ்வப்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு நீண்ட காலமாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால், வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாதநிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கும் விஜயகாந்த் நலமாக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் விஜயகாந்த் குறித்து உருக்கமாகப் பேசி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் அவர், வணக்கம்.. கேப்டன் என்று அனைவராலும் பாசத்துடனும் ,நேசத்துடனும் அழைக்கப்படும் என் அன்பு நண்பன் விஜி பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.


Advertisement