சினிமா

ப்பா.. சத்யாதானா இது! திருமண கோலத்தில், மணமகளாக சும்மா வேற லெவலில் இருக்காரே!! மெய்மறந்து ரசிக்கும் இளசுகள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமான தொடரான பொன்மகள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமான தொடரான பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஆயிஷா. ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகிச் சென்றார். பின்னர் சன் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்தார்.

இந்தநிலையில் ஆயிஷா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டாகி வரும் சத்யா தொடரில் கதாநாயகியாக கெத்தான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ஆயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும்  வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவது வழக்கம். அவர் தற்போதும் திருமணக்கோலத்தில் மணப்பெண் போல முழுமேக்கப்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் சத்யாவா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement