சினிமா

சர்க்கார் கதை இந்த படத்தோட திருட்டு கதையா? அம்பலமான உண்மையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

sarkar story stole from sengol movie story

 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படம் சர்க்கார். இப்படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார் .மேலும் இதில் விஜய்க்கு ஜோடியாக   கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில்  தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு தடை கோரி வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்கார்’படத்தின் கதை , தன்னுடைய   'செங்கோல்' என்ற படத்தின் கதை எனவும் தனது கதையை திருடி முருகதாஸ் படம்  இயக்கியுள்ளார் என்றும் கூறியுள்ளார் .மேலும் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். 

                     

                      
இந்நிலையில், செங்கோல் என்ற கதையும், சர்கார் படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்துள்ளது. இது குறித்து அவர்கள் வருண்க்கு அளித்த கடிதத்தில் கூறியதாவது,  கதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூறியதன் பேரில்  செங்கோல் கதையும்,சர்க்கார் கதையும் ஒன்று என முடிவு செய்தோம்,

மேலும்  தங்கள் பக்கம் நியாயத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை தடை செய்ய மாட்டோம், முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது. 


Advertisement