சினிமா

சர்க்கார் விஜய்க்கு அமைக்கப்பட்ட வானுயர கட்-அவுட்டின் அவல நிலை; அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!

Summary:

sarkar movie - vijay cut out

தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள சர்க்கார் படத்திற்காக இளைய தளபதி விஜய்க்கு அமைக்கப்பட்ட வானுயர கட்டவுட் சாய்ந்து விழுந்துள்ளதால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள சர்க்கார் படம் தீபாவளியை முன்னிட்டு வெளிவர உள்ளது.

Image result for sarkar 

ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

புதிதாக உருவான இப்படத்தின் கதை தொடர்பான நீதிமன்ற வழக்கும் தற்சமயம் நிறைவடைந்துள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து நடிகர் விஜய்க்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அங்குள்ள கொல்லம் நண்பர்கள் என்ற விஜய் ரசிகர் மன்றம் சார்பாக விஜய்க்கு 175 அடி உயரத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய வானுயர கட்டவுட் அமைக்கப்பட்டிருந்தது.

வீணானது ரசிகர்களின் அயராத உழைப்பு - தரைமட்டமானது சர்காரின் வானுயர கட்-அவுட்!!

கடந்த சில தினங்களாக அங்கு வந்த பெய்த கனமழை காரணமாக அந்த கட்அவுட்  சாய்ந்து விழுந்துள்ளது. மிகவும் ஆவலுடன் இரவு பகலாக வேலை செய்து கட்டவுட்டை தயார் செய்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து சோகத்தில் உள்ளனர்.


 


Advertisement