
sarkar movie
தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் சர்க்கார் படம் விரைவில் வெளியிட உள்ளது.இந்த படத்தின் அப்டேட்கள், பாடல்கள் என வெளிவந்த வண்ணம் உள்ளது.இதில் நடிகையாக கீர்த்திசுரேஷ்,வரலக்ஷ்மி,ராதாரவி,யோகிபாபு என்னும் நட்சத்திரங்கள் நடித்து வருகின்றன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்திலிருந்து "சிம்டாங்காரன்" மற்றும் "ஒரு விரல் புரட்சி" ஆகிய பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன.
இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி சர்கார் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. மீதமுள்ள மூன்று பாடல்களையும் சேர்த்து மொத்தமுள்ள ஐந்து பாடல்களும் மேடையில் பெர்ஃபாம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.சென்னை தாம்பரத்திலுள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் இன்று மாலை பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வரும் ரசிகர்களுக்காக மூவாயிரம் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த படம் திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் மட்டும் ரூ.9.5 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளது. இதற்க்கு காரணம் இதற்க்கு முன் வெளிவந்த மெர்சல் தான்.
இதுவரை வெளிவந்த தளபதி படங்களிலேயே இந்த படம் தான் அதிக வியாபாரமாகியிருப்பதாக கூறுகின்றார்கள்.
Advertisement
Advertisement