சினிமா

தமிழ் ராக்கர்ஸ்ல் சர்க்கார்; ட்விட்டரில் பகிரங்கமாக வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்! அதிர்ச்சியில் படக்குழு

Summary:

sarkar in tamil rockers

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது சர்க்கார் திரைப்படம். 

சில நாட்களுக்கு முன்பு சர்க்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. படம் முழுவதும் அரசியல் பேசப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம்.  

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்கார் திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி தான் வெளியிடப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. 

இந்நிலையில் வரும் நவம்பர் 6ம் தேதி திரைக்கு வரும் விஜய்யின் சர்கார் படத்தின் HD பிரிண்டை விரைவில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டரில் சவால் விட்டுள்ளனர். தற்போது தமிழ் சினிமா துறைக்கு பெரிய தலைவலியாக இருப்பது தமிழ்ராக்கர்ஸ் தான். திரைக்கு வரும் படங்களை ஒரு சில நாட்களிலேயே இணையத்தில் திருட்டுதனமாக அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த தளத்தை தடை செய்ய பல முயற்சிகள் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடந்தாலும், அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement