தமிழகம் சினிமா

வெளியான சர்க்கார் பாடலின் வீடியோ; படக்குழு அதிர்ச்சி

Summary:

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் சர்க்கார். துப்பாக்கி, கத்தி ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை விஜய்க்கு கொடுத்த ஏ. ஆர். முருகதாஸ் இந்த படத்தை இயங்குவதால் விஜயின் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜனவரி 2018 இல் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் நவம்பர் 7, 2018 இல் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக விஜயின் எல்லா படங்களிலும் ஒரு மாஸ் ஓப்பனிங் பாடல் இடம்பெரும். இதேபோல் சர்க்கார் படத்தின்  ஓப்பனிங் பாடல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் 5 நாட்களாக படமாக்கி வந்தனர். 

sarkar opening song க்கான பட முடிவு

அப்போது விஜய் நடனக்குழுவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்போது அந்த பாடலின் படப்பிடிப்பை வீடியோ எடுத்த யாரோ இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் விஜ நடனக்குழுவுடன் ஆடும் காட்சி வெளியாகியுள்ளது. இதனை கண்ட படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளது.


Advertisement