
Saran post video about his father spb health condition
கொரோனா நோய் தொற்று காரணமாக பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நேற்று முன்தினம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் எஸ்.பி. பி விரைவில் குணமடையவேண்டுமென பிரார்த்தனை செய்ய தொடங்கினர். இந்நிலையில் நேற்று வெளியான தகவலின்படி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Just now 👍🏼👍🏼 #spb pic.twitter.com/DRidKQA4Hd
— Nitinsathyaa (@Nitinsathyaa) August 15, 2020
அதனை தொடர்ந்து எஸ்.பி.பி சரண் தனது தந்தையின் உடல்நிலை குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், அப்பாவின் உடல் நலம் நன்றாக உள்ளது. உடலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் தெரிகிறது என கூறியுள்ளார்.
Advertisement
Advertisement