சூர்யா 44 பட இசையமைப்பாளர் இவர்தான்.! பிறந்தநாளில் போஸ்டருடன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!Santhosh narayanan is the music director to surya 44 movie

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படம் சர்வதேச அளவில் 38 மொழிகளில் வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 10 கெட்டப்புகளில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணி 

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். சூர்யா 44 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் மற்றும் சூர்யாவின் 2டி இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம்  துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க: சூர்யா 44 படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்.! அட.. யார்னு பார்த்தீங்களா!!

போஸ்டருடன் வெளிவந்த அறிவிப்பு 

இந்நிலையில் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் பரவியது. தற்போது அதனை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாளான இன்று 
போஸ்டர் வெளியிட்டு  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: முதன்முறையாக இணையும் பிரபலம்.! சூர்யா 44 பட இசையமைப்பாளர் இவரா?? உற்சாகத்தில் ரசிகர்கள்!!