சன் டிவி தொடரில் புதிய வரவாக களமிறங்கும் பிரபல நடிகை! செம உற்சாகத்தில் ரசிகர்கள்! வீடியோ இதோ!!

சன் டிவி தொடரில் புதிய வரவாக களமிறங்கும் பிரபல நடிகை! செம உற்சாகத்தில் ரசிகர்கள்! வீடியோ இதோ!!


santhiya-going-to-act-in-kanmani-serial

தமிழ் சினிமாவில் காதல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சந்தியா. அதனைத் தொடர்ந்து அவர் டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், தூண்டில், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், நூற்றுக்கு நூறு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சந்தியா தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. பின்னர் அவர் சந்திரசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஷீமா என்ற அழகிய பெண்குழந்தை உள்ளது.

இந்நிலையில் சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகை சந்தியா தற்போது மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி என்ற சீரியலில்  கவுரவ தோற்றத்தில் நடிப்பதன் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இதுகுறித்த ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.