சினிமா

தனக்கென தனி இடத்தை பிடிக்க சீரியலில் களமிறங்கிய பிரபல நடிகை! உற்சாகத்தில் ரசிகர்கள்.

Summary:

Santhini vijay tv thalambu

தமிழ் சினிமாவில் நடிகர் சாந்தனு நடிப்பில் வெளியான சித்து+2 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சாந்தினி. அதன் பிறகு நான் ராஜாவாகப் போகிறேன் என்ற படத்தில் நடித்துள்ளார். 

சமீபத்தில் கூட விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கவண் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றாலும் இவருக்கு என்று தனி இடம் கிடைக்கவில்லை.

எனவே தற்போது பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் புதிதாக வரவிருக்கும் தாழம்பூ என்ற சீரியலில் நடித்து வருகிறார். அதன் மூலம் தற்போது அனைவரை திரும்பி பார்க்க வைத்துள்ளார். 


Advertisement