சினிமா பிக்பாஸ்

சாண்டியின் மனைவிக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே இப்படிப்பட்ட உறவா.! உருக்கமாக அவரே போட்டுடைத்த ரகசியம்!!

Summary:

sandy wife talk about losliya

 பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷண், வனிதா ஆகியோர் மட்டுமே உள்ளனர் . மேலும் கடந்த வாரம் சீக்ரட் ரூமில் அடைக்கப்பட்ட சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர பலருக்கும் சந்தோசம் ஏற்பட்டது. 

Image result for sandy family entry in bigg boss

இந்நிலையில் நேற்றைக்கு முந்தையநாள் முதல் புதிய டாஸ்க் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர்.

அதன்படி நேற்று கவினின் நண்பர், சாண்டியின் மனைவி , மகள் மற்றும் ஷெரின் குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். அப்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாண்டியின் மனைவி சில்வியா அனைவரிடமும் கலகலப்பாக பேசியுள்ளார். அப்பொழுது அவர் அனைத்து போட்டியாளர்கள் முன்பும் லாஸ்லியா தனது தங்கை போன்று இருப்பதாகவும், அவர் கண்ணீர் வடித்தால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதனை கேட்டு லாஸ்லியா மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.


Advertisement