சினிமா

கோலாகலமாக சாண்டி வீட்டில் நடந்த விசேஷம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர்! வைரலாகும் கொண்டாட்ட புகைப்படங்கள்!!

Summary:

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி, தனது திறமையால் பெருமளவில் முன்னேற

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி, தனது திறமையால் பெருமளவில் முன்னேறி தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். தனது கலகலப்பான பேச்சால், செயலால் அவர் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சாண்டி மாஸ்டர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இங்கு பாய்ஸ் குரூப் என்ற பெயரில் சக போட்டியாளர்களான தர்ஷன், கவின், முகேனுடன் சேர்ந்து செய்த சேட்டைகள், கலகலப்பான காமெடிகள் பார்வையாளர்களை ரசிக்க வைத்து பெருமளவில் கவர்ந்தது.

டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் மனைவி சில்வியா. அவர்களுக்கு 3 வயதில் லாலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தற்போது சில்வியா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் அவருக்கு மிகவும் கோலாகலமாக அவரது வீட்டில் வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. அதில் சில தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Advertisement