ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
4 வருட காதல்! திடீர் திருமணம் செய்துகொண்ட பகல்நிலவு சீரியல் பிரபலங்கள்! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற தொடரில் ஆரம்ப கட்டத்தில் கதாநாயகர், நாயகிகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்கள் அன்வர் மற்றும் சமீரா. இவர்கள் அந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இருவரும் திடீரென ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாறினர்.
இவர்கள் பகல் நிலவு தொடரிலேயே காதல் ஜோடிகளாக மக்களுக்கு அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து பல வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வந்த இவர்கள் வெற்றிகரமாக சீரியல்களை தயாரித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்த அன்வர் மற்றும் சமீரா இருவரும் மிகவும் எளிமையாக திடீரென திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் தங்களது திருமண புகைப்படங்களை சமீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.