விஜய்யோட இந்த ஒரு பாடலை கேட்டுட்டு நடிகை சமந்தா என்ன வார்த்தை கூறியுள்ளார் பார்த்தீங்களா!!



samantha tweet abot singapenne song

விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து  நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

மேலும் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு பிகில் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

vijay

இப்படத்தில் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் படத்தின் ட்ரைலர், ரிலீஸ் தேதி போன்ற அடுத்தடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில் பிகில் படத்திற்காக ஏஆர் ரஹ்மான் பாடிய சிங்கப் பெண்ணே என்ற பாடல் படக்குழுவினருக்கு தெரியாமல் இணையத்தில் கசிந்தது. அதனை தொடர்ந்து பாடல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்பாடலை கேட்ட சமந்தா இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த டீமை நம்புங்கள். அவர்கள் எப்போதும் சரியான விஷயத்தையே செய்வார்கள் என பதிவிட்டுள்ளார்.