அடேங்கப்பா.. இந்த பட்டம் வேற லெவலில் இருக்கே! நடிகர் தனுஷிற்கு சமந்தா கொடுத்த பட்டம்! என்னனு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பின் பல முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் நடிகை சமந்தா. இவருக்கென ஹீரோக்களுக்கு இணையாக பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து சமந்தா படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார். அவர் தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி கிறிஸ்துமஸ் முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் சமந்தா பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் சமந்தா பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது நடிகர் கரண் ஜோஹர் தனுஷ் குறித்து ஒரே வார்த்தையில் கூறும்படி சமந்தாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ‘குளோபல் ஸ்டார்’ என கூறியுள்ளார். தனுஷுக்கு சமந்தா கொடுத்த அந்த பட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.