சினிமா

சினிமாவை விட வெப் சீரியலில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை சமந்தா... ஆச்சர்யத்தில் திரையுலகினர்.!

Summary:

தமிழில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு  அறிமுகமானவர் நடி

தமிழில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு  அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனை தொடர்ந்து அவர் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தாவின் கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் போன்ற படங்கள் உள்ளன.

நடிகை சமந்தா அதிகபட்சமாக ஒரு படத்துக்கு 1.5 கோடி முதல் 2 கோடி வரை மட்டும் சம்பளம் வாங்கி வந்துள்ளார். ஆனால் சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடருக்காக சமந்தா 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமந்தா சினிமாவை விட வெப் தொடருக்கு அதிக சம்பளம் வாங்கியது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Advertisement