முன்னாள் கணவரின் நியாபகத்தை முற்றிலுமாக அழித்த சமந்தா.. என்ன செய்தார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

மேலும் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலை நாட்டிய சமந்தா, தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இது போன்ற நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகரானா நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர். விவாகரத்துக்கு பின்பு பல சர்ச்சையில் சிக்கி வந்த சமந்தா எதையும் கண்டு கொள்ளாமல் அவரது வேலையில் பிஸியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் நாக சைதன்யாவுடன் முதன் முதலில் இணைந்து நடித்த தெலுங்கு திரைப்படத்தை தனது முதுகில் டாட்டூவாக குத்திருயிந்த சமந்தா அதனை தற்போது அழித்துள்ளார். சமீபத்தில் இவர் பதிவிட்டிருந்த புகைப்படத்தில் டேட்டூ இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் இப்புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.