"சூரிய ஒளியில் தங்க சிலை போல் மின்னும் சமந்தா" ரசிகர்களின் கமெண்டால் வைரலான புகைப்படம்..



Samantha latest photos viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

samantha

தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். தனது நடிப்பு திறமையாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார் சமந்தா.

சமீபத்தில் இவருக்கு மயோசிட்டிஸ் எனும் நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். தற்போது விஜய் தேவகொண்டாவுடன் இணைந்து 'குஷி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

samantha

இது போன்ற நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன் செட்டில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.