பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
அம்மாடியோவ்..நடிகை சமந்தாவின் இந்த ஹேண்ட் பேக்கின் விலை மட்டும் எவ்வளவுனு பார்த்தீங்களா! செம ஷாக்காகிருவீங்க!!
நடிகை சமந்தா வைத்திருந்த ஹேண்ட்பேக் ஒன்றின் விலை கேட்டு நெட்டிசன்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த டாப் ஸ்டாராக வலம் வருபவர் சமந்தா. அவருக்குகைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல் படமும், சாகுந்தலம் உள்ளிட்ட சில படங்கள் உள்ளன. இவரது கணவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆனநிலையில் அண்மையில் இருவரும் தாங்கள் விவாகரத்து செய்து பிரியவிருக்கும் செய்தியை அறிவித்தனர்.
நட்சத்திர தம்பதிகளாக விளங்கி வந்த இவர்களது பிரிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமந்தாவின் கருக்கலைப்பு, தகாத உறவுதான் அவர்களது விவாகரத்துக்கு காரணம் என பல அவதூறு கருத்துக்கள் பரவி வந்தது. ஆனால் அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தா விளக்கம் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சமந்தா தன்னை பிஸியாக வைத்துக்கொண்டு வருகிறார். அவர் தற்போது தனது தோழியுடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார்.
மேலும் அங்கிருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தனது கையில் வைத்திருந்த J'adior ஹேண்ட்பேக் பலரையும் கவர்ந்த நிலையில் அதன் விலையை இணையத்தில் தேடியுள்ளனர். அந்த ஒரு ஹேண்ட் பேக்கின் விலை ரூ. 1.30 லட்சமாம். இதனை அறிந்த ரசிகர்கள் ஒரு ஹேண்ட்பேக்கிற்கு இவ்வளவா என வாயடைத்து போயுள்ளனர்.