புதிய சர்ச்சை.. படத்தில் அரைகுறை ஆடை, முத்தக்காட்சி, நெருக்கமான காட்சி எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறாரா நடிகை சமந்தா?.! டைரக்டர்களுக்கு நிபந்தனை..!!

புதிய சர்ச்சை.. படத்தில் அரைகுறை ஆடை, முத்தக்காட்சி, நெருக்கமான காட்சி எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறாரா நடிகை சமந்தா?.! டைரக்டர்களுக்கு நிபந்தனை..!!


Samantha decide for acting in glamour role

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் யசோதா. இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக சகுந்தலம், குஷி ஆகிய படங்களும் இவரது நடிப்பில் தயாராகி வருகிறது. 

Actress samantha

அத்துடன் ஹிந்தியில் மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகை சமந்தா இனி வரும் படங்களில் கிளாமராக நடிக்கபோவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக முன்பே தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், தற்போது சக நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் சமந்தா நடிக்கமாட்டார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அரைகுறை ஆடையுடன் நடிக்கமாட்டேன் என்றும், முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் சமந்தா நிபந்தனை வைப்பதாக கூறப்படுகிறது.

Actress samantha

இந்த நிபந்தனைக்கு சம்மதம் தெரிவிப்பவர்களின் படங்களை மட்டுமே இனி சமந்தா நடிக்க இருக்கிறாராம். இந்த தகவல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில், இந்த தகவல்கள் உண்மையா? என்பது தெரியவில்லை.