சினிமா

நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா? ரசிகரின் கேள்விக்கு நச்சென பதிலளித்த நடிகை சமந்தா! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

Summary:

Samantha answered to fans question about her pregnant

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு மொழியில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அடுத்ததாக சமந்தா தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கேம் ஓவர் உள்ளிட்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

 நடிகை சமந்தா முன்னணி நடிகர் நாகார்ஜுனின் மகனும்,  தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகியுள்ளார். அதனைத் தொடர்ந்தும் அவர் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனோ ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை சமந்தா சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு  பதிலளித்துள்ளார். 

அப்பொழுது ரசிகர் ஒருவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என சமந்தாவிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அவர் ஆம் நான் 2017ஆம் ஆண்டிலிருந்து கர்ப்பமாக உள்ளேன். எனது வயிற்றில் தான் குழந்தை இருக்கிறது. வெளியே வராமல் அடம்பிடிக்கிறது என கிண்டலாக பதிலளித்துள்ளார்.


Advertisement