மோசமடைந்த உடல்நிலை.! மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

மோசமடைந்த உடல்நிலை.! மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!


Samantha admitted in hospital news viral

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் அண்மையில் மியோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பிய அவர் குணமடைந்து வருவதாக கூறியிருந்தார்.

இதுகுறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை சமந்தா நடிப்பில் உருவான யசோதா திரைப்படம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. மேலும் இந்த திரைப்படம்  நல்ல வசூலும் படைத்தது. இதனால் சமந்தா பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்.

samantha

இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அதாவது அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் அவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து சமந்தா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது