சாகுந்தலம் பட தோல்வியால் சமந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

சாகுந்தலம் பட தோல்வியால் சமந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!


Samantha acting web series to priyanka chopra mother character

தமிழ் சினிமாவில முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்திருக்கும் பல திரைப்படங்களில் வெற்றியை அடைந்துள்ளன.

samantha

இவரின் நடிப்பு திறமையின் மூலம் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் சமந்தா. சமீபத்தில் இவருக்கு மயோசைடிஸ் என்னும் அரியவகை தோல் நோய் ஏற்பட்டு பின்பு குணமாகிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிலையில், 'சாகுந்தலம்'  திரைப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். இவரின் படங்கள் தொடர் தோல்வி அடைந்து வந்ததால் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் இப்படமும் பலத்த தோல்வியை அடைந்தது. இதனால் சமந்தா மனமுடைந்து போனார்.

samantha

தற்போது இந்தி மொழியில் 'சிட்டாடல்' எனும் வெப் சீரிஸ் படப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரியங்கா சோப்ரா, வருண் தவண் போன்றோர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரில் பிரியங்கா சோப்ராவிற்கு அம்மாவாக சமந்தா நடிக்க உள்ளாராம். இதை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் சமந்தாவின் ரசிகர்கள் வருத்தத்திற்கு உள்ளாகிருக்கின்றனர்.