சூப்பர் ஸ்டார் ரஜினி... இப்போ இவரா?? லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க விரும்பும் முன்னணி பாலிவுட் நடிகர்!! யார் பார்த்தீங்களா!!

சூப்பர் ஸ்டார் ரஜினி... இப்போ இவரா?? லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க விரும்பும் முன்னணி பாலிவுட் நடிகர்!! யார் பார்த்தீங்களா!!


salmankhan-like-to-act-in-logesh-kanagaraj-movie

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனது திறமையால் அசுரவேகத்தில் முன்னேறி தற்போது தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் கைதி, தளபதி விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் போன்ற படங்களை இயக்கி இருந்தார். அந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் நடிப்பில் லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக நடிகை திரிஷா நடிக்கிறார். லியோ படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Logesh kanagaraj

பிரம்மாண்ட இயக்குனருக்கு இணையாக முன்னேறியுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க பல பிரபலங்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி கூட அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதற்காக அவர் லோகேஷ்க்கு 50 கோடி வரை சம்பளம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.