சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்று படம்.! வேற லெவல் ஆக்ஷன்.! ஆச்சர்யமூட்டும் ட்ரைலர்.!



saina-nehwal-movie-trailer


இந்தியாவுக்காக பேட்மிண்ட்டன் போட்டிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே வீரராக இருப்பவர் ஹரியானாவைச் சேர்ந்த சாய்னா நேவால். சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக அமேல் குப்தா 2019 ஆம் ஆண்டு அறிவித்தார். இதனையடுத்து படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இதற்கு முன்னர் தோனி, மேரி கோம் உள்ளிட்ட விளையாட்டு வீரார்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில், அமேல் குப்தா இயக்கத்தில் வெளியாகவுள்ள சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்றுப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில், சாய்னா நேவாலாக நடித்துள்ளார் பிரனிதி சோப்ரா. இப்படம், வரும் மார்ச் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர். அதில், சிறு வயது சாய்னாவாக காட்டப்படும் சிறுமி அப்படியே சாய்னாவை ஜெராக்ஸ் எடுத்ததுபோல் உள்ளார். இந்த ட்ரைலர் வைரலாகி வருகிறது.