நிச்சயதார்த்த விழாவில்.. படுகா நடனம்.. சாய் பல்லவியின் அசத்தல் வீடியோ.!Sai Pallavi dance in her sister engagement

பிரபல நடிகை சாய் பல்லவி மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதன் மூலம் புகழ்பெற்ற அவர் அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் அடி எடுத்து வைத்து கொடி கட்டி பறந்து வருகிறார். 

நடிகை சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் எனும் தங்கை இருக்கிறார். அடிக்கடி தங்கையுடன் சேர்ந்து சாய் பல்லவி ஏதாவது வீடியோ வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். 

ஒருமுறை அவரது தங்கை குறித்து சாய்பல்லவி பேசிய போது கூட, தங்கை மாநிறம் என்பதால் அவர் கவலை அடைந்ததாகவும் கேலியை சந்தித்ததாகவும் அவர் பேசியிருந்தார். சமீப காலமாக சாய் பல்லவி திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். 

Sai pallavi

இந்த நிலையில் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு திருமண ஏற்பாடு நடந்தேறியுள்ளது. தனது காதலன் வினித்துடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அந்த நிச்சயதார்த்தத்தில் நடிகை சாய் பல்லவி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது குடும்பத்தாருடன் சேர்ந்து படுகா நடனம் ஆடி இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது