தலைவா.. சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபல இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்! வைரலாகும் புகைப்படம்!

தலைவா.. சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபல இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்! வைரலாகும் புகைப்படம்!


sachin-tendulkar-wish-rajinikanth-birthday

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால், ஸ்டைலால் தமிழ்மக்களை கவர்ந்து, கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று(12-12-2020) கொண்டாடுகிறார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையடுத்து அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி நடித்த பாட்ஷா,அண்ணாமலை, படையப்பா போன்ற  திரைப்பட கெட்டப்புகளில் அவரது ரசிகர்கள் போயஸ் கார்டனில் அவரது வீட்டின் முன்பு குவிந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் சச்சின், தான் நடிகர் ரஜினிகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா!  நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை கடவுள் உங்களுக்கு ஆசிர்வதிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.