அச்சு அசலாக நடிகர் சுஷாந்த் போலவே இருக்கும் இளைஞருக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா! வைரலாகும் புகைப்படம்!

அச்சு அசலாக நடிகர் சுஷாந்த் போலவே இருக்கும் இளைஞருக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா! வைரலாகும் புகைப்படம்!


Sachin diwari act in sushanth singh biographic movie

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில்  நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது இத்தகைய விபரீத முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் பிரபல வாரிசு நடிகர்களின் ஆதிக்கம்தான் என கருத்துக்களும் எழுந்து வந்தது. இந்நிலையில் சுஷாந்தின் மரணம் தொடர்பாக மும்பை பந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Sushanth singh

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் படமாக உருவாகவுள்ளது.  மேலும் அந்த படத்தில்அவரது கதாபாத்திரத்திரத்தில் நடிக்க சுஷாந்த் போலவே தோற்றம் கொண்ட டிக் டாக் பிரபலம் சச்சின் திவாரி என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ஷாமிக் மவுலிக் இயக்கவுள்ளார். 

மேலும்  சூசைட் ஆர் மர்டர் (sucide or Mureder) என்று டைட்டில் வைக்கபட்டுள்ள இந்தப் படத்தை விஜய் சேகர் குப்தா தயாரிக்கிறார். மேலும் இதற்கு  ஸ்ரத்தா பண்டிட் இசைமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.