அட கடவுளே.! சாட்டை பட நடிகருக்கு என்ன ஆச்சு..?! வெளியான வீடியோ., அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

அட கடவுளே.! சாட்டை பட நடிகருக்கு என்ன ஆச்சு..?! வெளியான வீடியோ., அதிர்ச்சியில் ரசிகர்கள்.!



Saattai movie yuvan became a parotta master in hotel

தமிழ் சினிமாவில் நல்ல பெயர் பெற்று பிரபலமான நடிகர்கள் பலருக்கும் ஒரு கட்டத்திற்கு பின்னர், வாய்ப்புகளே இல்லாமல் போவது வாடிக்கையான விஷயம் தான். அதுபோல பல்வேறு நடிகர்கள் தங்கள் கெரியரை இழந்து அதன் பின் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை நடத்துவார்கள். ஆனால், ஒரு சிலர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் நிகழ்வு நடந்தது கூட நாம் பார்த்தது தான். 

Yuvan

வேறு சிலரோ மருத்துவ ரீதியாக உடல் பாதிப்பை அடைந்து அதனால் மருத்துவ செலவுக்கு கூட காசு இல்லாமல் இறந்து போகும் நிகழ்வு கூட ஏற்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு பாசக்கார நண்பர்கள் எனும் திரைப்படம் வெளியானது. இதில் ஹீரோவாக நடிகர் யுவன் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் சமுத்திரகனியின் சாட்டை, கமர்கட்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன் பின் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

Yuvan

இந்த நிலையில் தற்போது இவர் ஒரு பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறாராம்.Youtube சேனல் ஒன்று யுவனை பேட்டி எடுத்த நிலையில் அதில் அவரே தனது நிலை குறித்து பேசுகிறார்.

பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் பரோட்டா போட கற்றுக் கொண்டதாக அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். இது தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.