"விஜயின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது" கண் கலங்கிய எஸ் ஏ சந்திரசேகர்.!?

"விஜயின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது" கண் கலங்கிய எஸ் ஏ சந்திரசேகர்.!?SA chandra shekhar feared about his son vijays future

தமிழ் திரை துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தீ கோட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

vijay

இப்படத்திற்குப் பின்பு தளபதி 69 திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இச்செய்தி ரசிகர்களின் மனதில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்.

விஜயின் அரசியல் நகர்வை குறித்து பல திரைபிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதனையடுத்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். இவர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்களுக்கு பல உதவிகளை வழங்கியிருந்தார். இது போன்ற நிலையில் விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் இவரை குறித்து தொடர்ந்து இணையத்தில் பல சர்ச்சையான விஷயங்களை பேசி வருகிறார்.

vijay

தற்போது பிரபல யூ ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர், "புஸ்ஸி ஆனந்த் ஒரு வாட்ஸ் அப் குரூப் வைத்திருக்கிறார். அதில் விஜயும் இருக்கிறார். அதில் புஸ்ஸி ஆனந்த் மக்களுக்கு சேவைகள் செய்வது போல் ஏமாற்றி புகைப்படம் எடுத்து மக்களையும், விஜயையும் நம்ப வைக்கிறார். எந்த அரசியல்வாதியும் இப்படி செய்ய மாட்டார். இவருடன் விஜய் கட்சி தொடங்கி இருப்பது அவரின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல, விஜயின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது" என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.