முதல்வரின் ஒரே உத்தரவு! பறிப்போன நடிகை ரோஜாவின் பதவி! என்ன காரணம் தெரியுமா?roja-removed-from-industrial-leader-post-UX9QWX

கடந்த 2019ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில்
ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்று சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ள நடிகை ரோஜாவுக்கு ஜெகன் மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும்  எ திர்பார்க்கப்பட்டது.

ஆனால் சாதிவாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ரோஜாவுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு துறையின் தலைவராக ரோஜா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அந்த பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

Roja

அதாவது எம்.எல்.ஏக்களுக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகன் முடிவு செய்த நிலையில் பல எம்.எல்.ஏக்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ரோஜாவின் பதவியும் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பதவிக்கு மெட்டுகோவிந்த ரெட்டி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளாராம்.