நல்லவேளை ஜஸ்ட் மிஸ்.. நூலிழையில் உயிர்தப்பிய நடிகை ரோஜா! என்னதான் நடந்தது??

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
திருமணத்திற்குப் பின் சினிமாவிற்கு முழுக்கு போட்ட அவர் அரசியலில் பிஸியாக இருந்து வருகிறார். நடிகை ரோஜா நேற்று விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கு தனியார் விமானம் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பெங்களூருவில் தரையிறக்கியுள்ளார். இதனால் ஏற்படவிருந்த பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் விமானம் தரையிறக்கப்பட்ட பின்பும் விமானத்தின் கதவு 4 மணிநேரம் திறக்கப்படவில்லை, யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என நடிகை ரோஜா கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.