த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
அப்போ அதெல்லாம் வதந்தியா.. நடிகை ரோஜா மகளின் கனவு இதுதான்.! உடைந்த உண்மை!!
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு என பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரோஜா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.
நடிகை ரோஜா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்த ஆர்.கே செல்வமணியை காதலித்து கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தெலுங்கில் நேரடியாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவியது.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது இயக்குனர் செல்வமணி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எங்களது மகளுக்கு சிறுவயதிலிருந்தே சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்பது மட்டுமே விருப்பம். எங்களது விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிக்கும் பெற்றோர்களாக நானும் ரோஜாவும் இருந்தது கிடையாது. அவள் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ஆசைப்பட்டார். அதை நிறைவேற்றி வைத்தோம்.
தற்போது பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இன்னும் நான்கு வருடங்கள் அங்குதான் இருப்பாள். அதனால் அவர் சினிமாவில் நடிக்கப் போகிறார் என்பதெல்லாம் வதந்தி. ஒருவேளை நான்கு வருடங்கள் கழித்து அவள் சினிமாவில் நடித்த விருப்பபட்டால் நானும் எனது மனைவியும் அனுமதிப்போம். ஆனால், இப்போதைக்கு அவளுக்கு நடிக்க விருப்பமில்லை. சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்பதே அவளது கனவு என கூறியுள்ளார்.