நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த நடிகர் ரோபோ ஷங்கர்! மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் அதிர்ச்சி....
தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ரோபோ சங்கர், தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி வெளியானதும், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட உடல்நிலை சிக்கல்
சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முந்தைய உடல்நிலை பிரச்சனைகள்
ரோபோ சங்கர் ஏற்கெனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மெதுவாக மீண்டு வந்திருந்தார். தற்போது ஏற்பட்ட இந்த நிலைமை மீண்டும் ரசிகர்களை கவலையிலாக்கியுள்ளது.
இதையும் படிங்க: விழா மேடையிலையே மயங்கி விழுந்த நடிகர் விஷால்!! பரபரப்பு வீடியோ.
திரையுலகில் பிரபலமாகவும், மக்களின் இதயத்தில் இடம்பிடித்த நடிகராகவும் விளங்கும் ரோபோ சங்கர், விரைவில் குணமடைந்து திரையில் மீண்டும் மகிழ்ச்சியுடன் தோன்ற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகை ராதிகா சரத்குமார் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் அதிர்ச்சி...