சினிமா

அரசியலை கலக்கிய எல்.கே.ஜிக்கு வந்த சோதனை! அதிரடியாக ஆர்.ஜே பாலாஜி கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

Summary:

rj balaji answered to fans teasing about lkg

தமிழில் ஆர். ஜே வாக இருந்து  தீயா வேலை செய்யனும் குமாரு, நானும் ரவுடி தான், ஜில் ஜங் ஜக், தேவி, கடவுள் இருக்கான் குமாரு, வேலைகாரன், தானா சேர்ந்த கூட்டம் என பல முக்கிய படங்களில் நடித்தவர் பாலாஜி.

அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் எல்.கே.ஜி. இதனை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் பிரபு இயக்கியுள்ளார். மேலும் இதில் நாயகியாக பிரியா ஆனந்த், ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் சமீபகால அரசியல் நிகழ்வுகளை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படம்.இந்நிலையில் சமீபத்தில் இதற்காக போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

   

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில்,அதனை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து சமூகவலைத்தளங்களில் நபர் ஒருவர்  ஓவர் சீஸ் போனியாகிடுச்சு, ஆனா நீ பண்ற சேட்டைக்கு இங்க எவன் வாங்குறானு பாப்போம் என விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு ஆர்.ஜே பாலாஜி, சக்தி பிலிம் பேக்டரிதான் தமிழகத்தில் படம் வெளியாவதற்கான உரிமையை பெற்றுள்ளனர் என கூறி பதிலடி கொடுத்துள்ளார். 


Advertisement