வாக்காளர்களே வெளியானது ஆர்.ஜே பாலாஜியின் தேர்தல் தேதி அறிவிப்பு.!

வாக்காளர்களே வெளியானது ஆர்.ஜே பாலாஜியின் தேர்தல் தேதி அறிவிப்பு.!


rj balaji - new flim lkg release date announced

நடிகா் ஆா்.ஜெ. பாலாஜி காநாயாகனாக அறிமுகமாகும் எல்கேஜி திரைப்படம் வருகின்ற 22ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எல்.கே.ஜி. இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும்  நாயகியாக பிரியா ஆனந்த், ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில்,அதனை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

LKG

இந்நிலையில் வருகின்ற 22ம் தேதி படம் வெளியாகவிருப்பதால் படக்குழு விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவக்கியுள்ளது. குடியரசு தினத்தன்று முதல் பாடல் மற்றும் போஸ்டரை வெளியிட்டது. அந்த போஸ்டருக்கே எதிர்ப்புகள் கிளம்பின. 

இந்நிலையில் LKG படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இது ஒட்டுமொத்த இந்திய அரசியலின் கலவையாகவே தென்பட்டது. தற்சமயம் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர வேலைகளில் இறங்கியுள்ளனர். எல்கேஜி படக்குழுவினரும் தங்களது படம் வெளியாக உள்ள நாளான 22ம் தேதியை தேர்தல் நாளாக வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.