சினிமா

புதிய அவதாரமெடுக்கும் சூப்பர் ஹீரோ ஹிரித்திக் ரோஷன்! இந்த நடிகரை விட 10 மடங்கு அதிக சம்பளமா? தலைச்சுற்றிபோன ரசிகர்கள்!

Summary:

rithick roshan ask 80 crores salary for webseries

பாலிவுட் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து வசூல் மன்னராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் ஹிரித்திக் ரோஷன். சூப்பர் ஹீரோவான இவர் கிரிஷ், தூம் 2,ஜோதா அக்பர் மற்றும் கடந்த ஆண்டு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த  வார்திரைப்படத்தின் மூலம் பல மொழி ரசிகர்களையும் பெருமளவில் கவர்ந்து வசூல் சாதனையை குவித்தார்.

இந்நிலையில் பல முன்னணி பிரபலங்களும் தற்போது வெப் சீரிஸில் களமிறங்கி வரும் நிலையில் நடிகர் ஹிரித்திக் ரோஷனும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் உருவாகவிருக்கும் பிரம்மாண்டமான வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார்.1993 ஆம் ஆண்டு பிரபல நாவலாசிரியர் ஜான் லே கேரி எழுதிய தி நைட் மேனேஜர் என்ற நாவலை தொடராக பிபிசி நிறுவனம் வெளியிட்டது. அதனையே தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வெப் சீரிஷாக இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு உருவாக்க உள்ளது.

பிபிசி டிவி தொடர்

இந்த தொடரிலேயே தற்போது ஹிரித்திக் ரோஷன் நடிகர் உள்ளார். மேலும் இந்த தொடரில் நடிப்பதற்கு ஹிரித்திக் ரோஷன் ரூ80 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளது. இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உருவாக்கிய சேக்ரட் கேம்ஸ் என்ற தொடரில் நடித்த சைப் அலிகான் சம்பளத்தை விட பத்து மடங்கு அதிகம் என கூறப்படுகிறது இது குறித்த தகவல்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் பெரும் ஷாக்காகியுள்ளனர்.


 


Advertisement