விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா படத்தில் இணைந்த பிரபலம்! யார் தெரியுமா?

விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா படத்தில் இணைந்த பிரபலம்! யார் தெரியுமா?


ravi-k-chandran-joins-new-varma-movie

தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை வர்மா என்ற பெயரில் இயக்குனர் பாலா இயக்கினார். படத்தில் நாயகனாக விக்ரம் மகன் துருவ் நடித்தார்.

படத்தின் வேலைகள் முடிந்து காதலர் தினத்தன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் படத்தின் இறுதி காப்பி எங்களுக்கு பிடிக்கவில்லை என்றும், மீண்டும் முதலில் இருந்து  படத்தை வேறொரு இயக்குனர் வைத்து இயக்கப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

arjun reddy remake

மேலும் புதிய வர்மா படத்தில் துருவ் ஜோடியாக நடிக்க வளர்ந்து வரும் பாலிவுட் நடிகை பனிதா சந்து ஒப்பந்தமாகி இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. மேலும் அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தை இயக்கிய இயக்குனர் சந்தீப் வங்காவிடம் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இந்த படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

arjun reddy remake

இந்நிலையில் புதிய வர்மா கூட்டணியின் ஒளிப்பதிவாளராக பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே. சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார்.7ம் அறிவு’ படத்துக்குப் பின் இந்தி, தெலுங்குப் படங்களில் மட்டுமே ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ரவி. கே. சந்திரன் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமா பக்கம் வந்துள்ளார்.